SMS MEDITATION
You are
i n v i t e d
SMS MEDITATION
பிரபஞ்சம் நம்மை சோதிக்கும். நாம் தனிமைப்படுத்தப்படுவோம். கொடுப்பினை இருந்தால் இந்த செய்தியை வாசிப்பீர்கள்.
குரு தர்மம் மூலம் அறிவு தேடி, பயணம் செய்யுங்கள், நமது வாழ்க்கையின் இலக்கை அடையலாம்.
ஆன்மீகத்தின் ஆனந்தத்தை அனுபவித்த றியலாம். அதில் அனைத்தும் மறந்து இணையலாம் (லயிக்கலாம்).
சுயநலமின்றி அனைத்தையும் நேசிப்போம்.
நம் குடும்பத்துடன் சேர்ந்து நன்றி சொல்லி பயணம் செய்யலாம்.
வாழ்க்கையில் சவால்களை எப்படி எதிர்கொள்ளலாம்?

வரப்போகும் பிரச்சனைகளை முன்பே அறிந்து, அதிலிருந்து தப்பிக்க ஒரு வழி உண்டு என்றால்..! இன்று நாம் வாழும் 3rd dimension இல் இருந்து பார்க்க முடியாத பல பிரச்சனைகளையும் சிறிது உயரத்தில் இருந்து, அதாவது 14 th dimension இல் இருந்து பார்த்தால் அறிய முடியும். உடல், மனம், பொருளாதாரம், தாம்பத்தியம் என்று அனைத்திலும் உள்ள பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு.

ஆன்மீகம் பயில என்ன செய்ய வேண்டும்?

சரியான ( மனோபாவம்) அணுகுமுறை உள்ளவர் யாருக்கு வேண்டுமானாலும் குருவின் அனுமதியுடனும் ஆசியுடனும் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஜாதி, மத, இன வேறுபாடு இன்றி இந்த முறையை பயிற்சி செய்யலாம். பிரபஞ்சத்துடன் உள்ள தொடர்பு மீண்டும் நிறுவப்பட்டு, பிரபஞ்ச சட்டங்கள் அனுசரித்து வாழ்க்கை நடத்த தயாரா? ஆன்மீக ஞானம் பெற்ற ஒரு குரு மூலம் இதை பயிற்சி செய்யலாம்.

அனுபவம் மூலம் மட்டுமே அறியக்கூடிய ஆன்மீகத்தை படித்தறிய முயல்வது சரியா?

ஒரு பிறவி முழுவதும் முயன்றாலும், நமக்கு ,நம்மை குறித்து அறிந்து கொள்ள இயலாது. அப்படி இருக்க அனைத்திற்கும் புகார்கள் மட்டும். இலக்கு புரியாமல் அனைவரையும் குறை சொல்லி வாழ்வதைவிட எவ்வளவோ நல்லது வாழ்வின் இலக்கு என்னவென்று புரிந்து கொண்டு அதை பூர்த்தி செய்து, மகிழ்ச்சியாக வாழ்ந்து ,சமாதி ஆவது. உலக வாழ்வில் நின்று கொண்டு ஆன்மீக உணர்வை அறிய நாம் முயன்று பார்க்கலாம்.

ஆன்மீகம் மனதிலா அல்லது வெளி உலகிலா?

வெளியுலகில் தேடுவது பக்தியாகும். பக்தியின் சுயநலமற்ற நிலை தான் ஆன்மீகம். நம் உள்ளத்தில் தான் ஆன்மீக மாற்றம் ஏற்பட வேண்டும். வரலாறு, மற்ற பழக்க வழக்கங்கள் பக்தியின் வெளிப்பாடுகள் என்றால், தரிசனங்கள் ஆன்மீகத்திற்கு மட்டுமே உள்ள வெளிப்பாடாகும்."சுயநலம் உள்ளவனுக்கு பக்தியும், சுயநலமற்றவனுக்கு ஆன்மீகமும்". அனைத்து துன்பங்களுக்கும் காரணம் தீய ஆசைகள் தான். ஆன்மீகம் உள்ள இடத்தில் மகிழ்ச்சியும் சுகமும் உண்டாகும்.